காட்டுமன்னார்கோயில் அருகே 11 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை!
விருத்தாசலம் அருகே உள்ள தேவன்குடியைச் சேர்ந்த தங்கதுரை. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மாலா தனது குழந்தைகளுடன் காட்டுமன்னார்கோயில் அருகே


காட்டுமன்னார்கோயில் அருகே 6-ம் வகுப்பு படித்து 11 வயது சிறுவன் சவுக்கு தோப்பில் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தார்.
விருத்தாசலம் அருகே உள்ள தேவன்குடியைச் சேர்ந்த தங்கதுரை. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மாலா தனது குழந்தைகளுடன் காட்டுமன்னார்கோயில் அருகே பாப்பான்தோப்பு பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த ஒன்றரை வருடங்களாக தங்கியுள்ளார். இவர்களுக்கு தமிழ்வேலவன் என்ற மகனும், தமிழ்ச்செல்வி, தமிழரசி என்ற மகள்களும் உள்ளனர். மகன் தமிழ்வேலவன் (11) காட்டுமன்னார்கோயில் அருகே அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் தமிழ்வேலவன் சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் காணவில்லை. தாயார் மாலா மற்றும் உறவினர் தேடி வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டிற்கு அருகாமையில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள சவுக்கு தோப்பில் கழுத்து அறுபட்ட நிலையில் தமிழ்வேலவன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏதாவது ஒரு நிகழ்வை சிறுவன் பார்த்ததால், வெளியில் சொல்லாமல் இருக்க கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது சொத்து பிரச்சனையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...