ப.சிதம்பரம், சிதம்பரம் தொகுதிக்கு வராத, சிதம்பரம் ரகசியம் என்ன?
மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமானை ஆதரித்து ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என காங்கிரஸ் கட்சியில் மத்தியில் கேள்வி


மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமானை ஆதரித்து ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என காங்கிரஸ் கட்சியில் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கே.எஸ்.அழகிரியும், சிதம்பரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில் டாக்டர் ப.வள்ளல்பெருமானும் போட்டியிடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்திற்கு வருகை தந்த மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், புதுச்சேரி, கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களான நாராயணசாமி, கே.எஸ்.அழகிரி ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் அருகாமையில் உள்ள சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ப.வள்ளல்பெருமானை ஆதரித்து ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என காங்கிரஸார் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து வள்ளல்பெருமான் ஆதரவாளரிடம் கேட்ட போது, போதிய நேரம் இல்லாததால் வரவில்லை. வேறு ஒரு தினத்தில் ப.சிதம்பரம் பிரசாரத்திற்கு வருகிறார் என தெரிவித்தார். கடும் போட்டிக்கு இடையே சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் சீட் பெற்ற டாக்டர் ப.வள்ளல்பெருமான் ஜி.கே.வாசன் ஆதரவாக செயல்படுவதால், பிரசாரத்திற்கு ப.சிதம்பரம் வரவில்லை எனவும் சிலர் தெரிவித்தனர். எனவே சிதம்பரம் தொகுதியில் ப.சிதம்பரம் பிரசாரத்திற்கு வராதது, சிதம்பரம் ரகசியமாகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...