நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற அபிராமி உடனுறை அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் அருளாசியுடன ரதபிரதிஷ்டை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தேரோட்டம் தொடங்கியது.
திருத்தேரில் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ முருகர்,ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்,ஸ்ரீ அபிராமி,ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.அமிர்தகடேஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் சுற்றி வந்து பகல் 12 மணியளவில் தேரோட்டம் நிறைவு பெற்றது.
கோயில் பணியாளர்கள்,உள்ளூர் மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தேரோட்ட வைபவத்தில் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுத்து இறைவனை தரிசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

காங்கிரஸ் வேட்பாளா் ஆத்தூா் தொகுதி

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


