காங்கிரசுக்கும்,பிஜேபிக்கும் வாக்களித்தால் சமூக நல்லிணக்கம் சாம்பலாகிவிடும்: நாஞ்சில் சம்பத்

நாட்டின் 16வது மக்களவைத் தேர்தலில் 81 கோடியே 41 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இது உலக அதிசயம். இந்த தேசத்தை அழிப்போரின் கையில் கொடுக்கப் போகிறீர்களா, மக்களின் துயரை
Updated on
1 min read

காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் வாக்களித்தால் சமூக நல்லிணக்கம் சாம்பலாகிவிடும் என்றார் கட்சியின் துணை கொள்கைபரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.

கரூர் மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரைக்கு ஆதரவாக சனிக்கிழமை இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:

நாட்டின் 16வது மக்களவைத் தேர்தலில் 81 கோடியே 41 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இது உலக அதிசயம். இந்த தேசத்தை அழிப்போரின் கையில் கொடுக்கப் போகிறீர்களா, மக்களின் துயரை சிலுவைப்போல சுமந்து தீர்க்க நினைப்பவரின் கையில் கொடுக்கப் போகிறீர்களா, ஒரு நாட்டின் பிரதமருக்கு சிலை வைப்பதை பார்த்துள்ளோம், ஆனால் நாட்டின் பிரதமரே சிலையாக இருப்பது இந்தியாவில்தான். கருணாநிதிக்கு அழகிரி அரிவாளை தீட்டி விட்டார். அவர் தந்தையையா அல்லது சகோதரை வெட்டுகிறாரா என தெரியவில்லை. மொகலாயர் ஆட்சியில் ஒளரங்சீப்புக்கு ஏற்பட்ட கதி கருணாநிதிக்கு கிடைக்கப்போகிறது. நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. சத்ரபதி சிவாஜி, வெள்ளை ஏகாபத்தியத்தை எதிர்த்து சின்னமலைக்கும், பெரியமலைக்கும் இடையே போரிட்ட தீரன்சின்னலை, வேலுநாச்சியார் போன்ற வீரம் நிறைந்தவர்கள் பிறந்த மண்ணில் பாகிஸ்தான் வீரர்கள் நம்நாட்டின் வீரர்கள் தலையை கொய்தபோது கைக்கட்டி பார்த்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு இந்த காங்கிரஸ் அரசு. வங்க தேசத்துக்கே விடுதலை வாங்கிக்கொடுத்தது இந்தியா. அந்த வீரம் எங்கே போச்சு.

இந்தியாவில் காங்கிரஸ் தேர்தல் களத்திலே இல்லை. காவிரி பிரச்னையில் காங்கிரசின் கொள்கையும், பிஜேபியின் கொள்கையும் ஒரே கொள்கைதான். இலங்கைக்குச் சென்று ராஜபக்சேவை பத்திரமாத்து தங்கம் எனக்கூறியவர் சுஷ்மாசுவராஜ், இலங்கைக்கு சுகன்யா கப்பலை அனுப்பியது பிஜேபி அரசு. அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள வைகோ என்றும் இலங்கைத்தமிழர்களுக்கு நான் என்றும் ஆதரவாளன் என மார்தட்டுகிறாரே. இது வெட்கமில்லையா.

மத்தியில் திமுக அங்கம் வகித்தபோது காவிரி பிரச்னைக்கு ஒரு துரும்புகூட கிள்ளியது கிடையாது. பிஜேபி அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை. காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் வாக்களித்தால் சமூக நல்லிணக்கம் சாம்பலாகிவிடும். இந்தியா இனி விடவேண்டும் என்றால் அது உங்களால்தான் முடியும். பார் போற்றும் தரணியை ஆழ தமிழனுக்கு வாய்ப்பு கொடுங்கள், அந்த வாய்ப்பை ஜெயலலிதாவுக்கு கொடுங்கள் என்றார்.

முன்னதாக கூட்டத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். நகரச்செயலாளர் வை.நெடுஞ்செழியன் வரவேற்றார். கூட்டத்தில் தொலைக்காட்சி பேச்சாளர் நிர்மலாபெரியசாமி, மாவட் துணைச்செயலாளர் ஏ.ஆர்.காளியப்பன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்அமீது, கரூர் தொகுதி செயலாளர் எஸ்.திருவிகா உள்ளிóட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com