தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

திமுக, அதிமுகவில் தலைமை சரியில்லை: வைகோ

மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வைகோ சாத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.சாத்தூர் நகர் பகுதிகளில் உள்ள வெங்கடாசலபுரம்,கூர்லிங்காபுரம்,

Published On :5 ஜனவரி 2024, 10:33 am IST

மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வைகோ சாத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.சாத்தூர் நகர் பகுதிகளில் உள்ள வெங்கடாசலபுரம்,கூர்லிங்காபுரம்,அண்ணாநகர்,மேலகாந்திநகர்,முக்கராந்தல்,பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வைகோ பேசுகையில், தேர்தலில் ஒட்டுக்காக சில இடங்களில் 500ரூபாய்,300 ரூபாய்,1000 ரூபாய் பணம் கொடுக்கபடுகிறது.ஆளுங்கட்சியினர் பணத்தை கொடுத்துட்டாங்க,ஆண்ட கட்சியினர் பணத்தை கொடுக்க போறங்க,ஒரு வருடத்திற்க்கு கணக்கு பார்த்தால்,ஒரு நாளுக்கு 27பைசாதான் மக்களின் மதிப்பு என மக்கள் யோசிக்க வேண்டும்.

திமுகவிலும்,அதிமுகவிலும் நல்ல தொண்டர்கள் உள்ளனர். ஆனால் தலைமைதான் மோசம் இது தான் நாட்டின் நிலவரம்.மேலும் கூர்லிங்காபுரம் பகுதியில் பிரச்சாரத்திற்க்கு சென்ற போது பெண்கள் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது என்று புகார் தெரிவித்தனர்.தென்னக நதிகளை இணைத்தால் தான்,குடிநீர் பிரச்சனை தீரும் என்று பாரளுமன்றத்தில் நான் தான் மசோதா கொண்டு வந்தேன்.குடிநீர் பிரச்சனை மிகவும் முக்கியமானது.இந்த பிரச்சனையை போக்குவதற்க்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை நான் செய்வேன் என்று பேசினார்.

மேலும் இந்த பிரச்சாரத்தில் மதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.