ராகுல்காந்தியுடன் நடிகர் கார்த்திக் சந்திப்பு
ராமநாதபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான திருநாவுக்கரசருக்கு ஆதரவுகேட்டு,அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி திங்கள்கிழமை புது தில்லியிலிருந்து தனிவிமானம் மூலம்


ரமநாதபுரத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை மதுரை விமானநிலையத்தில் நடிகர் கார்த்திக் சந்தித்தார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான திருநாவுக்கரசருக்கு ஆதரவுகேட்டு,அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி திங்கள்கிழமை புது தில்லியிலிருந்து தனிவிமானம் மூலம் காலை 10.30 மணியளவில் மதுரை வந்தார். அவருக்கு ப.மாணிக்கம்தாகூர் எம்.பி தலைமையில்,முன்னாள் எம்.பி ராம்பாபு,திருப்ப ரங்குன்றம் பகுதிதலைவர் ரெங்கராஜ்,அரவிந்தன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர்.பின்பு 10.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ராகுல்காந்தி ராமநாத புரம் சென்றார்.அங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு,மீண்டும் மதியம் 1 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார்.அவரை நாடாளும் மக்கள் கட்சி தலைவரும்,நடிகருமான கார்த்திக் சந்தித்து பேசினார்.பின்பு விமானநிலைய ஓய்வு அறையில் அமர்ந்து தேநீர் சாப்பிட்ட ராகுல்காந்தி 1.15 மணிக்கு தனிவிமானம் மூலம் ஹைதராபாத் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...