மாயனூர் அருகே கார் மோதி வனத்துறை ஊழியர் சாவு

கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்த காட்டூரைச் சேர்ந்தவர் மருதநாயகம்(52). வனத்துறை ஊழியர். இவர் செவ்வாய்க்கிழமை காலை மாயனூரில் உள்ள கடைவீதிóக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்
Updated on
1 min read

மாயனூர் அருகே செவ்வாய்க்கிழமை கார் மோதி வனத்துறை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்த காட்டூரைச் சேர்ந்தவர் மருதநாயகம்(52). வனத்துறை ஊழியர். இவர் செவ்வாய்க்கிழமை காலை மாயனூரில் உள்ள கடைவீதிóக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கரூர்-திருச்சி சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்தவரை உடனே கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com