திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மதுராந்தகம் அருகே வாகன சோதனையில் 768 மதுபாட்டில்களுடன் மோட்டார் சைக்கிள் பறிமுதல்

நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகம் உட்கோட்டப்பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன்  உத்திரவின்படி, சித்தாமூர் போலீஸார் செவ்வாய்கிழமை இரவு வாகன தணிக்கை

Updated On :23 ஏப்ரல் 2014, 9:33 am

நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகம் உட்கோட்டப்பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன்  உத்திரவின்படி, சித்தாமூர் போலீஸார் செவ்வாய்கிழமை இரவு வாகன தணிக்கை செய்யும்போது, மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன்  உத்திரவின்படி, பாராளுமன்றத்தேர்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமை அன்று, பல்வேறு இடங்களில் போலீஸார் வாகன சோதனை, மர்மமான இடங்களை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை செய்தனர். சித்தாமூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீஸார் செவ்வாய்கிழமை இரவு மதுராந்தகம் அடுத்த ஜமீன்எண்டத்தூர் அருகே வாகன தணிக்கை செய்யும்போது, மோட்டார் சைக்கிளில் சந்தேகம்படும்படியாக ஜமீன்எண்டத்தூர் சின்னதுரை மகன் செந்தில் (23), அணணாநகர் வேதாசலம் மகன் ஏழுமலை (34) ஆகிய 2 நபர்கள் வேகமாக வந்தனர்.

அப்போது போலீஸார் அவர்கள் கொண்டு வந்த  பெட்டிகளை சோதனை செய்தபோது 180 மில்லி கொண்ட 384 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர். அவர்களை விசாரித்ததில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 324 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர். மொததமாக 768 மதுபாட்டில்களையும், மதுபாட்டில்களை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்யும் கைப்பற்றினார்கள்.

இது குறித்து சித்தாமூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.