வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 20 மையங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.
கடலூர் தொகுதியில் 1,408 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கடலூர் அருகே குண்டு உப்பலவாடி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 60 ஓட்டுகள் பதிவாகி இருந்தபோது, வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது. இதனையடுத்து புதிய வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு, பிறகு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் ஒரு சுமார் மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.
கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் நகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவு தொடங்கியபோது, வேலை செய்யவில்லை. இதனைத்தொடர்ந்து புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு 1 மணி நேர தாமத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியதுஇதுபோல் நெய்வேலி புனித பால் பள்ளியில் பாகம் எண் 125-ல் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் காலை 10 மணிக்கு வாக்காளர்கள் வாக்களித்தபோது, தான் வாக்களித்த கட்சிக்கு நேரில் இருந்த விளக்கு எரிந்ததோடு, பகுஜன்சமாஜ் கட்சியின் சின்னமான யானைக்கு நேராகவும் விளக்கு எரிந்ததாக வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, அந்த இயந்திரத்துக்கு பதிலாக வேறு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அங்கு 1 மணி நேரத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அப்போது ஏற்கனேவே நாங்கள் அளித்த வாக்கு பதிவானதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது என வாக்களித்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எந்த பட்டனை அழுத்தினாலும் அதற்கு நேராக விளக்கு எரிந்தால், அந்த வாக்கு மட்டுமே பதிவாகும் என்றனர். பழுதடைந்க வாக்குப்பதிவு இயந்திரத்தில் 125 வாக்குகள் பதிவாகி இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோல் திட்டக்குடி அருகே ராமநத்தம், போத்திரமங்கலம், கழுதூர், ம.புதூர், இடைசெருவாய், கொரக்கைவாடி, கீழகல்பூண்டி உள்பட 13 வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது. தகவலறிந்த தேர்தல் அலுவலர்கள் மாற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து வாக்குப்பதிவை துவங்கினர். இதனால் ஒவ்வொரு மையங்களிலும் சுமார் 20 நிமிடத்தில் இருந்து 1 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

