உளுந்தூர்பேட்டை வட்டம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் கிருஷ்ணமூர்த்தி(27). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசன், வேலாயுதம், ராஜூ மகன் முத்து, நாராயணன் மகன் வேலு, பெரியசாமி மகன் வடமலை( ஊராட்சி மன்றத்தலைவர்) ஆகியோருக்குமிடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை கிருஷ்ணமூர்த்தி காட்டுஎடையார் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். வரும்வழியில் கூத்தனூர் அய்யனார் கோயில் அருகில் ஒரு புதரில் மறைந்திருந்த ஒரு கும்பல் கிருஷ்ணமூர்த்தி வழிமறித்து தாக்கி கிருஷ்ணமூர்த்தியை இழுத்துக்கொண்டுபோய் அய்யனார் கோவில் அருகேயிருந்த மெக்கானிக் கடையில் கழுத்து அறுத்து படுகொலை செய்து ஒரு சாக்கில் வைத்து போட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.