அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மூதாட்டியின் இறுதிச் சடங்கில் தகராறு: இரு தரப்பு மோதலில் வீடு வாகனங்கள் சூறை; போலீஸார் குவிப்பு

விருதுநகர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் சம்பத்தில்  வீடு, வாகனங்கள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டதை அடுத்து கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On :25 ஏப்ரல் 2014, 3:49 pm

விருதுநகர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் சம்பத்தில்  வீடு, வாகனங்கள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டதை அடுத்து கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

   விருதுநகர் அருகே உள்ளது புல்லலக்கோட்டை கிராமம். இக்கிராமத்தில் கிழக்குத் தெருவில் ஒரு தரப்பைச் சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள் (80) இறந்துள்ளார். இறுதிச் சடங்கிற்கு மற்றொரு தரப்பைச் சேர்ந்த இந்தக் கிராம ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரத்தின் தம்பி வேல்முருகனும் சென்றுள்ளார். அப்போது, மாலையில் மயானத்திற்கு செல்வதற்கு முன்பு மேள தாளம் அடித்து ஆடியுள்ளனர். அப்போது, அவர்களோடு சேர்ந்து வேல்முருகனும் ஆடினாராம்.

இதில், ஒரு தரப்பைச் சேர்ந்த சேது, பரமசிவம், பொன்முருகன், குருசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை வேல்முருகன் தன் தரப்பினரிடம் கூறியுள்ளார். அதையடுத்து, உருட்டுக் கட்டைகள் உள்ளிட்ட கம்புகளுடன் சென்று அவர்கள் எதிர்ப் பட்டவர்களை தாக்கியதோடு, வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 10 இரு சக்கர வாகனம், சைக்கிள்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வீடுகளையும் அடித்து நொறுக்கினர். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.மகேந்திரன், வட்டாட்சியர் சிவஜோதி உள்ளிட்ட அலுவலர்கள் விரைந்து வந்தனர். இச்சம்பவத்தில் முத்து என்பவரின் மனைவி வள்ளி(கர்ப்பிணி பெண்), சேகர், ஊராட்சி எழுத்தர் சேது உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை போலீஸார் வாகனங்களில் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.