ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வத்திராயிருப்பில் இரு சமூகத்தினரிடையே மோதல்: 8 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் இரு சமூகத்தினரிடையே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2014, 7:07 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் இரு சமூகத்தினரிடையே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் ஒரு சமுதாயத்தினர் அனுமதியின்றி வைத்த டிஜிட்டல் பேனர் மற்றும் கொடிக்கம்பம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வத்திராயிருப்பில் குறிப்பிட்ட இரு சமுதாயத்தினர் சுமூகமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இரு சமூகத்தினரிடையேயுள்ள அமைதியைக் குலைக்கும் வகையில் சிலர் குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர் படம் மற்றும் வ.உ.சி படம் மீது மாட்டுச் சாணத்தை எறிந்து அசிங்கப்படுத்தியுள்ளார்கள்.

இதனைக் கேட்பவர்களை வெட்டிக் கொலை செய்வோம் என்றும் மிரட்டினார்களாம். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ச.முருகன்பிள்ளை (59) என்பவர் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரா.கருப்பையா (22), பி.ரஞ்சித் (24), பி.பிச்சாண்டி (22), த.பவுண்ராஜ் (22) ஆகியோரைக் கைது செய்தனர்.மற்றொரு புகார்: வியாழக்கிழமை இரவு வீ.தூங்கலாக்கோனார் (60) என்பவர் தனது மனைவியுடன் நின்று இரு சமுதாயப் பிரச்னைகள் குறித்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சே.சந்தனம் (22), மு.மணி (22) ஆகியோர் இருவரையும் ஆபாசமாகப் பேசி கல்லைக் கொண்டு தாக்கி கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டினார்களாம்.

இது குறித்து தூங்கலாக்கோனார், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தனம் மற்றும் மணியைக் கைது செய்தனர்.கிராம நிர்வாக அலுவலர் புகார்: கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் வீரியபெருமாள், வத்திராயிருப்பு முடுக்குத் தெரு பகுதியில் வியாழக்கிழமை இரவு தனது உதவியாளர்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பொது இடத்தின் அழகைக் குலைக்கும் வகையில் சிலர் ஒன்று திரண்டு, வ.உ.சி. படம் பொறித்த டிஜிட்டல் பேனர் மற்றும் அதன் அருகே கொடிக்கம்பத்தை நட்டுக் கொண்டிருந்துள்ளார்கள். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் வீரியபெருமாள் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வ.உ.சி. பேரவைத் தலைவர் அ.மணிகண்டன் (32), வ.உ.சி. இளைஞர் பேரவை உறுப்பினர் சு.கார்த்திக் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.தொடர்ந்து இப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.