பழனி அருகே காரின் டயர் வெடித்து விபத்து : மருமகனை வழியனுப்ப வந்த சித்த மருத்துவர் பலி
பழனி அருகே கார் விபத்தில் சித்த மருத்துவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.


பழனி அருகே கார் விபத்தில் சித்த மருத்துவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுரை கீழவாசல் பகுதியில் சித்த மருத்துவமனை நடத்தி வருபவர் மருத்துவர் குப்புச்சாமி(65). இவரது மருமகன் விஜயன். இவர் வேலை தொடர்பாக அரபு நாட்டுக்கு செல்ல இருந்ததால் அவரை கோவை விமான நிலையத்திற்கு வழியனுப்புவதற்காக குப்புச்சாமி காரில் வந்துள்ளார். காரை ராஜ்குமார்(26) ஓட்டி வந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை கோவையில் மருமகனை வழியனுப்பி விட்டு மதுரை செல்வதற்காக குப்புச்சாமி பழனி வழியே திரும்பி வந்துள்ளார். பழனியை அடுத்த வயலூர் அருகே கார் வந்து கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்ததில் கார் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மருத்துவர் குப்புச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
டிரைவர் ராஜ்குமார் லேசான காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...