பழனியில் ஆடிப்பெருக்கு: அஸ்த்ரதேவர், கன்னிமார் பூஜை
பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மலைக்கோவில் சன்னதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. விடுமுறை தினம் என்பதால் வின்ச்


பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்கள், நதிக்கரைகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வழிபாடு மேற்கொண்டனர்.
பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மலைக்கோவில் சன்னதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. விடுமுறை தினம் என்பதால் வின்ச் நிலையம், கட்டணதரிசன வழி. இலவச தரிசன வழிகளில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி சண்முகநதிக்கரையில் ஏராளமான பெண்கள் குடும்பத்தோடு வந்திருந்து மாங்கல்ய சரடு மாற்றி பூஜைகள் செய்தனர். சிறுவர் சிறுமியர் ஏராளமாக வந்திருந்து தேங்காய் கண்திறந்து அரிசி,சர்க்கரை, பருப்பு போட்டு கண் அடைத்து தீயில் சுட்டு சுவாமிக்கு படைத்து அவர்களும் உண்டு மகிழ்ந்தனர். பழனியை அடுத்த கோதைமங்கலம் அருள்மிகு பெரியாவுடையார் கோயிலில் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமான அருள்மிகு பெரியாவுடையாருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. உச்சிக்காலத்தின் போது மூலவர் சன்னதி முன்பு வினாயகர் வழிபாடு,புண்யாவாகனம் நடத்தப்பட்டு ஆறுகலசங்கள் வைக்கப்பட்டு கலசபூஜை நடைபெற்றது.
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து அருள்மிகு வினாயகர், அஸ்த்ரதேவர், சண்டிகேசுவரர், ஆனந்தவள்ளி சமேதர் சந்திரசேகரர் ஆகியோர் கோயில்யானை கஸ்தூரி புடைசூழ காலையில் புறப்பாடு செய்து உச்சிக்காலத்தின் போது பெரியாவுடையார் கோயிலை அடைந்தனர். அங்கு உச்சிக்காலத்தின் போது மூலவர் உள்ளிட்ட அனைவருக்கும் கலசங்களில் இருந்த புனிதநீர் ஊற்றப்பட்டு, சோடஷ உபச்சாரம், சோடஷ அபிஷேகம் ஆகியன நடத்தப்பட்டது. தொடர்ந்து மஹாதீபாராதனை நடைபெற்றது. பின் வேதமந்திரம் ஓத, மேளதாளம் முழங்க அஸ்த்ர தேவர் சண்முகநதிக்கரைக்கு எழுந்தருளினார். அங்கு ஆற்றுமணலில் கன்னிமார் பிடிக்கப்பட்டு அஸ்த்ரதேவர் பூஜை நடைபெற்றது.
செல்வசுப்ரமணிய குருக்கள் தலைமையில் செந்தில் சிவாச்சார்யார், சக்தி சிவாச்சார்யார் உள்ளிட்ட பலர் பூஜைகளை செய்தனர். பின் ஆற்றில் மாவிளக்கு சகிதம் முறைதாரர் ஆற்றில் இறங்கி கொக்காணி காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி கோயிலுக்கு திரும்பிய பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அஸ்த்ரதேவதா பூஜையில் பழனிக்கோயில் உதவி ஆணையர் மேனகா, பேஷ்கார் நாராயணன், மணியம் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...