தமிழக மீனவர்களை அன்றாடம் கைது செய்து, அவர்களின் மீன்களைக் கொள்ளையிட்டு வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் மீது நடவடிக்கை எடுத்து இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு அவ்வப்போது கடிதம் எழுதி வருகிறார். இதனை கொச்சைப்படுத்தும் வகையில், தரக்குறைவாக படங்கள் போட்டும் வசனங்கள் எழுதியும் ஒரு கட்டுரையை இலங்கை அரசின் ராணுவத்துறை இணையதளம் வெளியிட்டுள்ளது. சிங்கள அரசின் இந்த சின்னத்தனமான பண்பாட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.