ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மம்சாபுரத்தில் 150 ஆண்டு பழமையான ஆலமரத்தில் தீ: தென்னை, வாழை மரங்கள் தீயில் கருகின

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில் திங்கள்கிழமை 150 ஆண்டு பழமையான ஆலமரம் மற்றும் அருகில் உள்ள தென்னை மற்றும் வாழை மரங்கள் தீயில் கருகின. தீயணைப்புப் படையினர்

News image
Updated On :4 ஆகஸ்ட் 2014, 9:46 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில் திங்கள்கிழமை 150 ஆண்டு பழமையான ஆலமரம் மற்றும் அருகில் உள்ள தென்னை மற்றும் வாழை மரங்கள் தீயில் கருகின. தீயணைப்புப் படையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மம்சாபுரம், வாழைக்குளம் கண்மாய் கரையில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இதன் அருகே மயானம் உள்ளது. மரத்தையொட்டியுள்ள முள் வேலியில் யாரோ தீ வைத்துள்ளார்கள். இத் தீ ஆலமரத்தின் விழுதுகள் வழியே பிடித்து மரம் எரிய ஆரம்பித்தது. மேலும் இந்தத் தீ அருகில் உள்ள முன்னாள் ராணுவ வீரரான கொத்தாலத்தேவர் என்பவரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களிலும் பரவி பிடித்து. இந்த வெப்பத்தில் அருகில் இருந்த வாழை மரங்களும் கருகின.

சம்பவம் பற்றி அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை 1 மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீயினால் கொத்தாலத்தேவர் தோட்டத்தில் உள்ள 8 தென்னை மரங்கள் மற்றும் 6 வாழை மரங்கள் கருகின. மேலும் ஆலமரமும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்தத் தீயை யார் வைத்தது என்பது குறித்து மம்சாபுரம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.