சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) படிப்புகள் ஆகியவற்றில் சேருவதற்கான கவுன்சிலிங் கடந்த ஜூன் 25-ம் தேதி நடைபெற்றது. கலந்தாய்வு மாணவ, மாணவியர்கள் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் படியும் மற்றும் தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்படியும் நடைபெற்றது. கலந்தாய்வில் அனுமதி சேர்க்கை ஆணை பெற்ற அனைத்து (எம்பிபிஎஸ் 150 இடங்கள், பிடிஎஸ் 100 இடங்கள்) மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை செய்தனர். மேற்கண்ட மாணவ, மாணவியர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற செப்.1-ம் தேதி முதல் தொடங்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.