ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவிலில்புத்தூரில் வீட்டில் 66 கிலோ கஞ்சா பறிமுதல்: நால்வர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 66 கிலோ கஞ்சாவை போலீஸார் கைது செய்தனர்.மதுரையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு போலீஸாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் குறிப்பிட்ட வீடுகளில் கஞ்சா பெருமளவு பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல் வந்தது.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2014, 5:15 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 66 கிலோ கஞ்சாவை போலீஸார் கைது செய்தனர்.மதுரையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு போலீஸாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் குறிப்பிட்ட வீடுகளில் கஞ்சா பெருமளவு பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல் வந்தது.

இதன் பேரில் மதுரை போதைப் பொருள் தடுப்பு போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தேவர் தெருவில் குறிப்பிட்ட வீட்டிற்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கஞ்சா வாங்குவது போல் வந்துள்ளனர். ஒரு போலீஸார் முத்தம்மாள் என்பவர் வீட்டில் போய் கஞ்சா கேட்டு வாங்கியுள்ளார்.

அந்த பெண் பணம் கேட்டுள்ளார். ஆனால் போலீஸார் பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைந்திருந்த போதை தடுப்பு போலீஸார் வீட்டினுள் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து முத்தம்மாள் மற்றும் நாகஜோதி ஆகியோரைக் கைது செய்தனர்.

இது குறித்த தகவல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீஸாருக்கு தெரிய வரவே அவர்கள் இதே பகுதியில் உள்ள கஞ்சா வியாபாரி முனியாண்டி மனைவி ராக்கு (55) என்பவர் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ராக்கு, சங்கையா மகன் முருகன் (46) ஆகிய இருவரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவான செல்வம், இந்திரா ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.