ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தலித் கிறிஸ்தவர்கள் கருப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம்

10.8.1950-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திரபிரசாத் இருந்த போது சரத்து 3-ன் படி ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் இந்து மதத்தைச் சாராத தலித்கள் பட்டியலினத்தைச்

News image
Updated On :10 ஆகஸ்ட் 2014, 9:22 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

10.8.1950-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திரபிரசாத் இருந்த போது சரத்து 3-ன் படி ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் இந்து மதத்தைச் சாராத தலித்கள் பட்டியலினத்தைச் சேராதவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சரத்தின்படியே இன்று வரை தலித் கிறிஸ்தவர்கள் பிற்பட்டோர் பட்டியலில் உள்ளார்கள்.

இதனைக் கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 10-ம் தேதி தலித் கிறிஸ்தவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி. திருஇருதய தேவாலயத்தில் பங்குத் தந்தை அந்தோனிராஜ் தலைமையில் திருப்பலி முடிந்த உடன், ஆலய வளாகத்தில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கு பேரவையின் செயலாளர் புனிதன், உதவி பங்குத் தந்தை செபஸ்டியன் சின்னத்துரை, திருத்தொண்டர் ரிச்சர்டு உள்ளிட்ட ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

19.12.2009-ம் ஆண்டு மத்திய அரசில் அளிக்கப்பட்ட ரெங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையின் படி தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களை பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.