ஆந்திர மாநிலம் தடா அருகே போலிங்கால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்து ஜாபர் மகன் ரபீக்(23). இவர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் இன்ஞின் உட்பட உதிரி பாகங்களை திருடிய குற்றத்திற்காக ஆந்திர மாநிலம் தடா போலீஸôரால் கைது செய்யப்பட்டு தடா காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் திங்களன்று காலை ஆந்திர போலீஸôருக்கு டிமிக்கி கொடுத்த ரபீக் கைவிலங்குடன் அங்கிருந்து தப்பி தமிழக பகுதிக்கு வந்தார். அப்போது அவர் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போது கைவிலங்குடன் இவர் இருப்பதை பார்த்து பொதுமக்கள் அவர் மீது சந்தேகப்பட்டு அவரை பிடித்து வைத்து ஆரம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.