6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2014, 8:18 am

முத்துகுமார்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது பாதுகாவலர்களுக்கும் இணைந்து ஒரு சமூக பாதுகாப்புச் சட்டத்தை மக்களவையில் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவர் பி.தியாகராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். மருத்துவர் ராமகுரு,  மாவட்டச் செயலர் எஸ்.குமாரசாமி, மாவட்ட துணைத் தலைவர் எம்.இசக்கி, மாவட்டப் பொருளாளர் கே.காசி, கருணாநிதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

சங்க நிர்வாகிகள் கங்காதரன், ஆர்.கே.பெருமாள், பாலகணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.