டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கைவிலங்குடன் ஆந்திராவில் இருந்து தப்பிய கைதி தமிழகத்தில் கைது

தமிழக எல்லையை அடுத்த ஆந்திர பகுதியான தடா காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் காவல் நிலையத்தில் இருந்து தப்பிய கைதியை திங்களன்று கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2014, 10:32 am

பா.ஜான்பிரான்சிஸ்

தமிழக எல்லையை அடுத்த ஆந்திர பகுதியான தடா காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் காவல் நிலையத்தில் இருந்து தப்பிய கைதியை திங்களன்று கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலம் தடா அருகே போலிங்கால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்து ஜாபர் மகன் ரபீக்(23). இவர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் இன்ஞின் உட்பட உதிரி பாகங்களை திருடிய குற்றத்திற்காக ஆந்திர மாநிலம் தடா போலீஸôரால் கைது செய்யப்பட்டு தடா காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் திங்களன்று காலை ஆந்திர போலீஸôருக்கு டிமிக்கி கொடுத்த ரபீக் கைவிலங்குடன் அங்கிருந்து தப்பி தமிழக பகுதிக்கு வந்தார். அப்போது அவர் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போது கைவிலங்குடன் இவர் இருப்பதை பார்த்து பொதுமக்கள் அவர் மீது சந்தேகப்பட்டு அவரை பிடித்து வைத்து ஆரம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து ஆரம்பாக்கம் போலீஸார் அவரை கைது செய்து சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இது குறித்து தடா காவல் நிலையத்திற்கு தமிழக போலீஸார் தகவல் சொல்லவே அவர்கள் கும்மிடிப்பூண்டிக்கு வந்து கைவிலங்குடன் தப்பிய ரபீக்கை தடா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.