ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுதந்திர தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தலைமையில் நடைபெற்றது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சி.பாலமுருகன், லூ.ஜான்சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர். ஆசிரியை ந.ரெங்கலதா வரவேற்றார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2014, 6:58 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தலைமையில் நடைபெற்றது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சி.பாலமுருகன், லூ.ஜான்சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர். ஆசிரியை ந.ரெங்கலதா வரவேற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் கோமதிசங்கர் ஜி.குருசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவியரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாணவ மாணவியர் ஆங்கிலம் மற்றும் தமிழில் சுதந்திர தினம் குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.
விழாவில் ஆசிரியைகள் பா.பாத்திமா ஞானம், வே.ராஜேஸ்வரி, ஆசிரியர் செ.சண்முகநாதன், கிராம கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை ச.பொன்மலர் நன்றி கூறினார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சௌ.மேரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியை அமுதா சுதந்திர தினம் குறித்து சிறப்புரையாற்றினார்.
மம்சாபுரம்: புனித ஜோசப் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் முதல்வர் மற்றும் நிர்வாகி ஜே.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மம்சாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியை நளினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

சுந்தரபாண்டியம்: சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் குருவையா தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலசலிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விவேகா மழலையர் பள்ளி தாளாளர் மகாலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவர் முத்துச்சாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மகாத்மா பள்ளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் எம்.ராணி தலைமையில், தாளாளர் ஜி.எஸ்.முருகேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.