எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கழிவு பஞ்சு வியாபாரி கொலை வழக்கு: சக வியாபாரி கைது

ராஜபாளையம், வடக்கு மலையடிபட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் தலக்குத்தேவர் (48). இவருக்கு லீலா, காசியம்மாள் என்ற இரு மனைவிகள் உண்டு.  கழிவுப் பஞ்சு வியாபாரம் செய்து வந்த தலக்குத்தேவர்,

Updated On :17 ஆகஸ்ட் 2014, 2:18 pm IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவு பஞ்சு வியாபாரி வெள்ளிக்கிழமை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் பஞ்சு வியாபாரம் செய்யும் சக வியாபாரியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ராஜபாளையம், வடக்கு மலையடிபட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் தலக்குத்தேவர் (48). இவருக்கு லீலா, காசியம்மாள் என்ற இரு மனைவிகள் உண்டு.  கழிவுப் பஞ்சு வியாபாரம் செய்து வந்த தலக்குத்தேவர், பஞ்சுகளை விலை கூடுதல் கொடுத்து வாங்குவாராம். இதனால் உடன் கழிவு பஞ்சு வியாபாரம் செய்து வரும் ராஜபாளையம், சுப்பராஜா மடத்துத் தெருவைச் சேர்ந்த அர்ச்சுனராஜா மகன் ராமராஜ் (37) என்பவருடன் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு கொத்தங்குளம்-முத்துலிங்காபுரம் சாலையில் தலக்குத்தேவர் வந்து கொண்டிருந்துள்ளார். இவரைப் பின் தொடர்ந்து வந்த ராமராஜ், மோலயநாயக்கர் காடு அருகே இவர் கொடூரமான முறையில் பல இடங்களில் அரிவாளால் வெட்டி தலக்குத்தேவரை கொலை செய்துள்ளார்.

இது குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு, ராமராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.