மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பண்ருட்டி : பூமிக்கு அடியில் இருந்து விஷ்ணு துர்கை உட்பட 6 வெண்கலப் பொருட்கள் கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே சூளைக்கு மண் எடுக்கும் போது சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2014, 9:07 am

சீனிவாசன்

பண்ருட்டி அருகே சூளைக்கு மண் எடுக்கும் போது சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

பண்ருட்டி வட்டம் கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை (60). இவருக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ளது. இவரது இடத்தை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலு என்பவர் குத்தகைக்கு எடுத்து செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சூளைக்கு மண் தோண்டும் போது, அதில் இருந்து ஒரு அடி உயரமுள்ள விஷ்ணு துர்கை சிலை, 4 அங்குலம் உயரமுள்ள விநாயகர் சிலை, 4 அங்குலம் உயரமுள்ள நாகம், தூபகலசம், உடைந்த நிலையில் முக்காள் அடி உயரமுள்ள இரண்டு மணிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

இவை அனைத்தும் வெண்கலத்தால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் மோகன், வருவாய் ஆய்வாளர் ராஜூ, கிராம உதவியாளர் இப்ராகிம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சிலைகளையும், பூஜை பொருட்களையும் மீட்டு அதே பகுதியில் உள்ள விஷ்ணு துர்க்கை கோயிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இது தொடர்பான தகவல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாளைக்கு முன்பே கிடைத்த பொருட்களை, குத்தகைதாரர் தனது வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டதாகவும், இது குறித்து தகவல் பரவியதால் கோயிலில் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.