தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் சிறுமியிடம் சில்மிஷம்: முதியவர் கைது

சிதம்பரத்தில் சிறுமியிடம் சில்மிஷத்திடம் ஈடுபட்ட முதியவரை நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2014, 3:16 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் சிறுமியிடம் சில்மிஷத்திடம் ஈடுபட்ட முதியவரை நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

சிதம்பரம் பெரியவாணியத்தெருவைச் சேர்ந்தவர் ஹாஜாஅலாவுதீன் (65). அவர் அதே தெருவில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அங்கிருந்த தப்பிய சிறுமி தனது தாயாரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதை  கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் கடைக்கு சென்று ஹாஜாஅலாவுதீனை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவரை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து ஹாஜா அலாவுதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.