தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்

 பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்ட கால வரையரைக்குள் நிறைவேற்றக்கோரி ஒப்பந்தத் தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் என்.எல்.சி நிர்வாகத்தினரிடம் வேலைநிறுத்த நோட்டீஸை திங்கள்கிழமை அளித்தனர்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2014, 3:05 pm

ஜி.சுந்தரராஜன்

 பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்ட கால வரையரைக்குள் நிறைவேற்றக்கோரி ஒப்பந்தத் தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் என்.எல்.சி நிர்வாகத்தினரிடம் வேலைநிறுத்த நோட்டீஸை திங்கள்கிழமை அளித்தனர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறர்கள். இவர்கள் தங்களுக்கு குறிப்பிட்ட கால வரையரைக்குள் பணி நிரந்தரம் செய்தல், சமவேலைக்கு சம ஊதியம், ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, 20 சதவீதம் போனஸ், பணி நிரந்தரம் செய்யும் வரையில் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், உயர் மருத்துவ சிகிச்சை, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வீடு அல்லது பிளாட் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பணி நிரந்தரம் குறித்து உச்சநீதி மன்ற உத்தரவைக்கூட என்.எல்.சி. நிர்வாகம் நிறைவேற்ற வில்லை. இதனால் கடந்த ஜூலை 10-ந் தேதி மந்தாரக்குப்பத்தில் தர்ணா போராட்டமும், 26-ந் தேதி நெய்வேலி ஸ்கியூ பாலம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர், ஆகஸ்ட் 11-ம் தேதி கண்ட பேரணியை நடத்தினர்.

அடுத்த கட்ட போராட்டமாக வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ள இக்கூட்டமைப்பினர் திங்கள்கிழமை என்.எல்.சி தலைமை அலுவலகத்தில் வேலை நிறுத்த நோட்டீஸை முதன்மை பொதுமேளாளர் (மனிதவளம்) என்.முத்துவிடம் வழங்கினர்.

பழனிவேல், ஹென்றி (தொ.மு.ச),  ரகுராமன், ராஜபாண்டியன் (அ.தொ.ச.), சீனுவாசன், சக்கரபாணி (சி.ஐ.டி.யூ),  ரவி, முருகவேல் (பிடிஎஸ்),  ராமன் (எல்.எல்.எப்), சுகுமாறன் (என்.டி.யூ.சி), பரமசிவம் (ஐ.டி.யூ.சி), கௌதமன் (ஏ.ஐ.யூ.டி.யூ.சி) உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வேலை நிறுத்த நோட்டீசை முதன்மை பொதுமேலாளரிடம் வழங்கினார்கள். இதனால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைநிறுத்தம் விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.