நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2014, 2:57 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் திண்டுக்கல் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சியில் தவித்து வருகிறது.  திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது.  பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் வறட்சி காரணமாக விளைநிலங்கள் முற்றிலும் காய்ந்து வெடித்துள்ளது.  

குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  பழனியில் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  விவசாயம் பொய்த்தன் காரணமாக கால்நடைகளை கூட வளர்க்க முடியாமல் விவசாயிகள் விற்று வருகின்றனர். 

இந்நிலையில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை திடீர்மழை பெய்தது. 

பழனியில் பல பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.  பழனியில் இருந்து தொப்பம்பட்டி வரையிலும் மழையால் சாலையோரங்களிலும், விளைநிலங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. பழனியை அடுத்த வில்வாதம்பட்டியிலும் நல்லமழை பெய்ததால் சில தோட்டகிணறுகள் தண்ணீர் நிரம்பி நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

பழனியை அடுத்த ஆயக்குடி, சண்முகநதி, கலையமுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நல்லமழை பெய்துள்ளது. 

இதனால் விவசாயத்துக்கு தயாராக முடியாவிட்டாலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.