தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புலிப்பார்வை விழாவில் மாணவர்கள் மீது தாக்குதலுக்கு பெ.மணியரசன் கண்டனம்

புலிப்பார்வை திரைப்பட விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2014, 3:00 pm

ஜி.சுந்தரராஜன்

புலிப்பார்வை திரைப்பட விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘புலிப்பார்வை’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைப்படம், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பன்னிரெண்டு அகவை மகன் பாலச்சந்திரன், தன்னைப் போன்ற சிறுவர்களை சேர்த்துக் கொண்டு விடுதலைப்புலிகள் சீருடை அணிந்து பயிற்சி எடுப்பதைப் போன்றக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இக்காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை. போரில் ஈடுபடாத அப்பாவிச் சிறுவன் பாலச்சந்திரனை, சிங்கள இனவெறி அரசு கைத்தொடும் தூரத்தில் வைத்து சுட்டுக் கொன்றது என்பதையே இயக்குநர் கல்லம் மெக்கரே, பன்னாட்டுத் தரவுகளுடன் எடுத்த ஆவணப்படம் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, கடந்த 16.08.2014 அன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடந்த போது, மேற்படி உண்மைக்குப் புறம்பான காட்சி பற்றி தமிழினவுணர்வுள்ள மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேந்தர் மூவீஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மாணவர்களைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இந்த வன்செயலை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கேள்வி கேட்ட மாணவர்களுக்கு உரிய விடையளித்து அவர்களை அமைதிப்படுத்துவதற்கு மாறாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களைத் தாக்கி தரதரவென்று இழுத்து வெளியில் கொண்டு போகும்போது, காவல்துறையினர் தலையிட்டு அம்மாணவர்களை கைது செய்து, மருத்துவ சிகிச்சைக்குக் கூட வாய்ப்பளிக்காமல் ஒருநாள் முழுக்க அடைத்து வைத்து, மாலையில் விடுவித்திருக்கிறார்கள். காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டனத்திற்குரியது. அந்த வன்முறையில் ஈடுபட்ட அனைவரது மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்யுமாறு தமிழ்த் தேசியப் பேரிக்கத்தின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.