திட்டக்குடி மாணவியர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 21 பேர் கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மாணவியர்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா தெரிவித்துள்ளார்.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி மாணவியர்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு:
திட்டக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது 14 வயதுடைய பள்ளியில் படிக்கும் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை பெற்று திட்டக்குடி காவல் நிலைய குற்ற எண் 141- 2014ன் கீழ் சிறுமி காணவில்லை என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்புகாரில் தன் மகளின் தோழி அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியோடு காணவில்லை என குறிப்பிட்டுள்ளார். 5-8-2014 தேதி மேற்படி இருசிறுமிகள் திரும்ப வீட்டிற்கு வந்துவிட்டனர். அவர்களை விசாரித்த சுப்பிரமணியன் தன் மகளோடு காவல் நிலையம் வந்து தன் மகளும், தோழியும் பழக்கமான திட்டக்குடி லட்சுமி வீட்டிற்கு சென்றதாகவும், மேற்படி லட்சுமி இரு சிறுமிகளையும் விருத்தாசலம் கலா வீட்டிற்கு அனுப்பியதாகவும், அதன் பின்னர் பல இடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
அதன் பின்னர் போலீஸார் புலன் விசாரணையில் திட்டக்குடியில் இட்லி கடை வைத்துள்ள லட்சுமி என்கிற தனலட்சுமி பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தும் வழக்கமுள்ளவர் என்றும், சுப்பிரமணியன் மகள் மற்றும் தோழியையும், அவ்வாறு சிலமுறை ஈடுபடுத்தியுள்ளார். சிறுமிகளின் செலவுக்கு பணம் கிடைக்கும், யாருக்கும் தெரியாது என பேசி இவ்வாறு ஈடுபடுத்தியுள்ளார். எனவே இருவரையும் அதேபோல் தொழில் நடத்தும் கலா வீட்டிற்கு அனுப்பியுள்ளார். கலா அவர்களை திட்டக்குடி பாதிரியார் அருள்தாஸ் என்பவரிடம் அனுப்பியுள்ளார். அங்கு சுப்பிரமணியன் மகளின் தோழி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன் பின் திரும்ப கலாவிடம் வந்த சிறுமிகள், அவரது நாத்தனார் ஜெபினா, அதன் பின் வடலூர் சதீஷ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் பின்னர் சதீஷ் என்பவர் பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களுக்கும், நெல்லிகுப்பம் ராதா வீட்டிற்கும் அழைத்துச் சென்று சிறுமிகள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் கோலியனூர் கூட்டுரோடு பாத்திமா, அதன் பின் தேலம் அன்பு ஆகியோர் வசம் அனுப்பி சிறுமிகள் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறுமிகளை வன்கொடுமைக்கு ஈடுபட வைத்த லட்சுமி, கலா என்கிற மேகலா, ஜெபினா, வடலூர் சதீஷ், சதீஷ் மனைவி ரவிதா, சர்மிளா, மற்றொரு கவிதா, தமிழ்செல்விக்கு அறிமுகமான மகாலட்சுமி, நெல்லிக்குப்பம் ராதா, கோலியனூர் பாத்திமா, அவரது கணவர் நம்மாழ்வார், சேலம் அன்பு, சேலம் அமுதா, மற்றொரு அன்பு, பாலசுப்பிரமணியன், சதீஷ் டிரைவர் ஸ்ரீதர் ஆகியோரும், பாலியல் குற்றம் செய்த திட்டக்குடியைச் சேர்ந்த மோகன்ராஜ், மதிவாணன், விக்னேஷ், ஆனந்தராஜ், பாதிரியார் அருள்தாஸ் ஆகிய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பாலியல் குற்றம் செய்த பாதிரியார் உள்ளிட்ட 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சிறுமிகள் காணாமல் போன 8-6-2014 முதல் 5-8-2014 வரை சிறுமிகளை தங்க வைத்திருந்த நபர்கள், தங்க வைக்கப்பட்டிருந்த இடங்களான திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், உளுந்தூர்பேட்டை, சேலம் ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளது. இக்குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு கார், 3 இரு சக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் இவ்வழக்கில் சிறுமிகளை கடத்தியதற்கும், அடைத்து வைத்ததற்கும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டப்பிரிவுகலும் சேர்க்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என ஏ.ராதிகா எஸ்பி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...