நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் மீது வழக்குப் பதிவு

பழனியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் நூறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 2:04 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் நூறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 பழனி காமராஜ் நகர் ஆக்கிரமிப்பை பொதுப்பணித்துறை எடுப்பதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக தெரிவித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, முன்னாள் கவுன்சிலர் தீனதயாளன், விசுவ ஹிந்து பரிஷத் செந்தில்குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் செவ்வாய்க்கிழமை பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு எந்த முன்னனுமதியும் பெறப்படாததால் அவர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தும் கலைந்து செல்லாததால் சிவகிரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கருப்புச்சாமி கொடுத்த புகாரின் பேரில் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட நூறு பேர் மீது பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.