பழனி அருகே அரசுப் பேருந்து மோதி பால்காரர் பலி
பழனி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பால்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.பழனி அருகே சித்திரைக்குளத்தை சேர்ந்தவர் சித்தன்ன நாயக்கர் மகன் பரமராஜ்


பழனி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பால்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பழனி அருகே சித்திரைக்குளத்தை சேர்ந்தவர் சித்தன்ன நாயக்கர் மகன் பரமராஜ்(47). பால்வியாபாரம் செய்து வருகிறார். இவர் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் பழனி-உடுமலை சாலையில் சின்னக்கலையமுத்தூர் வண்டிவாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்த போது பழனி நோக்கி வந்த அரசுப்பேருந்துடன் எதிர்பாராவிதமாக மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அரசுப்பேருந்து ஓட்டுனர் ராமர் மீது பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...