பழனி அருகே தோப்பில் புகுந்து யானை அட்டகாசம்
பழனியருகே தனியார் தோப்பில் ஒற்றை யானை அட்டகாசம் செய்ததில் தென்னை மரங்கள், சாலைகள் சேதமாகின.


பழனியருகே தனியார் தோப்பில் ஒற்றையானை அட்டகாசம் செய்ததில் தென்னைமரங்கள், சாலைகள் சேதமாகின.
பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மா, வாழை, கொய்யா தோப்புகளும் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காட்டுயானைகளால் விளைநிலங்கள் சேதம், உயிர்சேதமும், மனிதர்களால் யானைகள் உயிர்பலியும் தொடர்ந்து வருகிறது. கடந்த இருவருடமாக காட்டுயானைகள் அட்டகாசம் குறைந்துள்ளது. பழனியை அடுத்த மேற்குமலைத்தொடர்ச்சி அடிவாரத்தில் பாலாறு பொருந்தலாறு அணை, வரதமாநதி அணைகள் உள்ளன. அணைகள் உள்ளதால் நிலத்தடி நீர் செழிப்பாக உள்ளதால் இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னந்தோப்பு, கரும்புத் தோப்பு, மாந்தோப்பு ஆகியன உள்ளன.
மேலும், நெல், மக்காச்சோளம் விவசாயமும் சிறப்பாக உள்ளது. இப்பகுதிகளில் வேட்டைத்தடுப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் காட்டுயானைகள், காட்டுமாடுகள், மான்கள், சிறுத்தை உள்ளிட்ட உயிரினங்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. தற்போது பருவமழை பொய்த்ததால் மலைப்பகுதிகளில் நிலவிவரும் கடும் வறட்சியால் வனவிலங்குகள் குடிநீர் தேவைக்காக அணைப்பகுதிக்கும், உணவுத்தேவைக்கு விளைநிலங்களுக்கும் வருவது தவிர்க்க முடியாததாகி உள்ளது. வனத்துறை சார்பில் பல கி.மீ தொலைவுக்கு அகழி, சோலார் மின்வேலி ஆகியன அமைக்கப்பட்டும், கண்காணிப்பு கேமராக்கள், அலாரங்களும் நிறுவப்பட்டும் யானைகள் வருவதை தடுக்க முடியவில்லை.
இதனால் விவசாயிகள் 7 மணிக்கு மேல் விளைநிலங்களுக்கு செல்வதில்லை. கூட்டத்தோடு வரும் யானையை விட ஒற்றையானை இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள கண்ணாடிப்பெருமாள் கோயிலின் பின்புறம் உள்ள சேட், ஷக்கீர் ஆகியோர் தோப்பிற்கு புகுந்த ஒற்றையானை சுமார் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதம் செய்துள்ளது. குருத்துக்களை ஒடித்து சாப்பிட்ட யானை பலமரங்களை வேறோடு பிடுங்கி எறிந்துள்ளது. முன்னதாக கோயில் பின்புறமுள்ள பாறையில் சுரேஷ்குமார் என்பரது சாலையை ஆவேசமாக கழற்றியுள்ளது.
ஓலைகள் பிடுங்குவதை அறிந்த அவர் ஓட்டுவீட்டுக்குள் சுமார் ஒருமணி நேரம் பதுங்கியிருந்ததாகவும், பின்பு அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் தீப்பந்தம், மேளசத்தம் கொண்டு அதை விரட்டியதாகவும் அச்சத்துடன் தெரிவித்தார். ஒற்றையானை குறித்து விவசாயி விலங்குத்துரை கூறுகையில், கடந்த சில வருடங்களாக இருந்த யானை பயம் தற்போது மீண்டும் துவங்கி விட்டது.
தோப்பு பூராவும் யானைத்தடமாக உள்ளது. பல ஆயிரம் மதிப்புள்ள காய்க்கும் பருவத்தில் உள்ள தென்னை மரங்களை யானை பிடுங்கியும், சாய்த்தும் சென்றுவிட்டது. வனத்துறையினர் காட்டுயானைகள் மீண்டும் வயல்வெளிகளிலும், தோப்புகளிலும் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...