தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆவணி அமாவாசை: சிதம்பரம் தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்!

சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லைக் காளியம்மன் கோயிலில், தில்லைக்காளிக்கு ஆவணி அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகம் மற்றும் 158-வது சிறப்பு அர்த்தசாம பூஜை ஞாயிற்றுக்கிழமை

News image
Updated On :25 ஆகஸ்ட் 2014, 9:46 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லைக் காளியம்மன் கோயிலில், தில்லைக்காளிக்கு ஆவணி அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகம் மற்றும் 158-வது சிறப்பு அர்த்தசாம பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

அமாவாசை, பெளர்ணி, அஷ்டமி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் தீபம் ஏற்றி காளியை வழிபட்டால் தீராதகடன், பகைவர்கள் தொந்தரவு, பூர்வஜென்ம சாப தோஷங்கள் தீரும், சித்தம் தெளியும் என்பது ஐதீகமாகும்

ஆவணி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மசாமுண்டி சந்நிதியில் நெய் தீப ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக் காப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். அமாவாசை சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் மறறும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.