தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

என்எல்சி சேவைத்துறைக்கு ரூ.26 கோடி செலவில் புதிய கட்டடங்கள் திறப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சேவைத்துறைக்கு ரூ.25 கோடி 80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை என்எல்சி தலைவர் பி.சுரேந்தர்மோகன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2014, 2:15 pm

ஜி.சுந்தரராஜன்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சேவைத்துறைக்கு ரூ.25 கோடி 80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை என்எல்சி தலைவர் பி.சுரேந்தர்மோகன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

என்எல்சி முதல் சுரங்கப்பகுதியில் நடைபெற்ற விழாவில் ரூ.25 கோடி 80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நான்கு வளாக கட்டடங்களை என்எல்சி தலைவர் பி.சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். இவ்விழாவில் என்எல்சி இயக்குநர்கள் ராகேஷ்குமார், எஸ்.ராஜகோபால், எம்.எஸ்.ரவீந்தரநாத், எஸ்.பூபதி, செயல் இயக்குநர்கள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

என்எல்சி சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் லக மற்றும் கனரக வாகனங்கள், மின் இயந்திரங்கள் ஆகியவற்றை பழுதுநீக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய சேவைத்துறை என்ற பிரிவு எல்எல்சியில் செயல்பட்டு வருகிறது. சுரங்கத்திற்கு தேவைப்படும் பொருள்களை சேகரித்து வைக்கும் துணைக்கிட்டங்கி, கரிக்கட்டி ஆலை ஆகியவற்றை 1 லட்சத்து 36 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.17 கோடி 58 லட்சம் செலவில் என்எல்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த துணைக் கிட்டங்கியில் பொருள்கள் சேகரிக்கு வைப்பதற்காக 18 பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், 3 திறந்த வெளிக்கிட்டங்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பழைய கரிக்கட்டி ஆலை வளாகத்தில் மத்திய மின்னியல் பணிமனையில் ரூ.7 கோடி செலவில் 31 ஆயிரம் சதுரஅடி பரப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 13 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவிலான பழைய கட்டடங்கள் புணரமைக்கப்பட்டுள்ளன. சேவைப்பிரிவில் செயல்படும் அனைத்து பணிமனைகள் மற்றும் இதர அலுவலகங்கள் 43 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.180 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் சுரங்கபகுதியில், சுரங்கங்களின் நிலத்தடி நீர்கட்டுப்பாடு பிரிவில் செயல்படும் மோட்டார்கள் மற்றும் பம்புகளுக்கு மின்சக்தி வழங்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள் பிரிவிற்கு 8340 சதுர அடிப்பரப்பில் ரூ.82 லட்சம் செலவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.