தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் கடற்கரை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்ட விநாகயர் சிலைகள்!

கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, பழைய நெய்வேலி ஏரி ஆகிய நீர் நிலைகளில் விநாயகர்சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ்

News image
Updated On :31 ஆகஸ்ட் 2014, 12:04 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, பழைய நெய்வேலி ஏரி ஆகிய நீர் நிலைகளில் விநாயகர்சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி அன்று கடலூர் மாவட்டத்தில் பக்தர்களால் சுமார் 3 அடி முதல் 6 அடி வரை மிகப்பெரிய விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு சுமார் 846 சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிலைகள் 3-ம் நாளான ஆக.31-ம் தேதியும், செப்.2-ம் தேதியும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ள வழியாக நீர்நிலைகளுக்கு சென்று கரைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, பெரியகுப்பம் கடற்கரை, பழைய நெய்வேலி ஏரி ஆகிய நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் மேள், தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 75 சதவீத விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டது. மீதமுள்ள  செப்.2-ம் தேதி 25 சதவீத சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம், சிதம்பரம் கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.