ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை அருகே இளைஞர் தலைத் துண்டித்து கொலை

திருநெல்வேலி அருகே புதன்கிழமை வேன் ஓட்டுநர் ச. அங்கப்பன் (30) தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார்

News image
Updated On :3 டிசம்பர் 2014, 10:13 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே புதன்கிழமை வேன் ஓட்டுநர் ச. அங்கப்பன் (30) தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கல்லூர் அருகேயுள்ள அய்யனார்குளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் அங்கப்பன் (30). வேன் ஓட்டுநர். புதன்கிழமை காலை வீட்டில் இருந்த அங்கப்பனுக்கு போன் வந்ததாம். இதையடுத்து அங்கப்பன் தனது  மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி அடுத்துள்ள ஸ்ரீராமன்குளத்திற்கு வந்து கொண்டிருந்தாராம்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அங்கப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இதில் அங்கப்பன் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார். தகவலறிந்த டி.எஸ்.பி. மலைச்சாமி, காவல் ஆய்வாளர்கள் சார்லஸ், கலைமணி சம்பவ இடத்திற்கு சென்று அங்கப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். திருநெல்வேலி எஸ்.பி. கே.எஸ். நரேந்திரன்நாயர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அங்கப்பன் கொலை செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நிகழாத வகையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.