ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

வடகிழக்குப் பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 2 ஆவது வாரத்தில் தொடங்கி பெய்து வருகிறது. இப்பருவத்தில் வழக்கத்தை விட கூடுதலாக பெய்த மழையால்  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறைந்த

News image
Updated On :3 டிசம்பர் 2014, 10:26 am

ஷேக் அப்துல்காதர்

தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் அவதிபட்ட பொதுமக்கள், மாணவர்கள் புதன்கிழமை மிதமான வெப்பம் நிலவியதால் உற்சாகமாக இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டனர்.

வடகிழக்குப் பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 2 ஆவது வாரத்தில் தொடங்கி பெய்து வருகிறது. இப்பருவத்தில் வழக்கத்தை விட கூடுதலாக பெய்த மழையால்  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறைந்த கொள்ளளவை கொண்ட கடனாநதி, ராமநதி, குண்டாறு, கருப்பாநதி, அடவிநயினார், நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியது.

கடும் பனிப்பொழிவு: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணிமுத்தாறு அருவியிலும் தொடர்ந்து வெள்ளம் இருந்தது.

தொடர் மழையால் இரவில் கடும் பனிப்பொழிவு இருந்தது. விடிந்த பிறகும் நீடித்த பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பனி தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களும், ஆரம்பப் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். தொடர் மழை ஓய்ந்து புதன்கிழமை வெயில் இருந்ததால் இயல்பு நிலைக்கு திரும்பிய பொதுமக்கள் சுறுசுறுப்பாக பணியில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் உற்சாகமடைந்தனர்.

உபரிநீர் திறப்பு: புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,420.23 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,014 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 500 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பியதை அடுத்து அணைகளுக்கு வந்து கொண்டிருந்த 1,900 கனஅடி தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 141.80 அடியாகவும்,சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 146.55 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 102.65 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணையில் மட்டும் 2 மி.மீ மழை பெய்துள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பாசனத் தேவைக்கு வழங்கப்படுகிறது.

பிற அணைகளின் நீர்மட்டம்: கடனாநதி அணை 80.70 அடி, ராமநதி அணை 81.25 அடி, கருப்பாநதி அணை 63.81 அடி, குண்டாறு அணை 36.10 அடி,

அடவிநயினார் அணை 96.25 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 40 அடி,  நம்பியாறு அணை 22.96 அடி, கொடுமுடியாறு அணை 52.50 அடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.