விருதுநகர் அருகே நடந்து சென்று தொடக்கப்பள்ளி ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 7 சவரன் நகையை பறித்துச் சென்றவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர் கணேஷ்நகரைச் சேர்ந்தவர் மனோன்மணி(41). இவர் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடம் விட்டு புதன்கிழமை மாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்தொடர்ந்து வந்த ஒருவர் திடீரென ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 7 சவரன் நகை பறித்தாராம். அப்போது, நகையை பறிக்க விடாமல் போராடிய ஆசிரியை சத்தம் போட்டு அக்கம் பக்த்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
அதையடுத்து விரைந்து வந்த பொதுமக்கள் கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, போலீஸார் விசாரித்ததில் திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்புராஜ்(50) என்பதும், தற்போது விருதுநகர் லட்சுமிகாலனியில் குடியிருந்து வருவதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக மனோன்மணி புகார் செய்ததின் பேரில் வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

