ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை, தூத்துக்குடியில் மழை நீடிப்பு: தாமிரவருணியில் 2வது நாளாக வெள்ளம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் தாமிரவருணி ஆற்றில் 2 ஆவது நாளாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2014, 5:06 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் தாமிரவருணி ஆற்றில் 2 ஆவது நாளாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வியாழக்கிழமை மழை நீடித்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமையும் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்ததால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக வந்து கொண்டிருப்பதால் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாமிரவருணி ஆற்றில் 2 ஆவது நாளாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 157, பாபநாசம் கீழ் அணை 72, சேர்வலாறு அணை அதிகபட்சம் 205, மணிமுத்தாறு அணை 60.4, கடனாநதி அணை 18, ராமநதி அணை 25, கருப்பாநதி அணை 20, குண்டாறு அணை 18, அடவிநயினார் அணை 20, கொடுமுடியாறு அணை 12.

திருநெல்வேலி 36.1, பாளையங்கோட்டை 61, கன்னடியன் அணைக்கட்டு 77, சேரன்மகாதேவி 26, அம்பாசமுத்திரம் 33, நான்குனேரி 19, தென்காசி 43.4, ஆய்க்குடி 50.8, செங்கோட்டை 21, ஆலங்குளம் 54.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் 26, மணியாச்சி 5, கயத்தாறு 8, கடம்பூர் 69.2, கழுகுமலை 11, சாத்தான்குளம் 4, திருச்செந்தூர் 78, குலசேகரப்பட்டினம் 21, எட்டயபுரம் 1, ஸ்ரீவைகுண்டம் 3, விளாத்திகுளம் 11.5, கீழஅரசடி 31.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 8,000 கனஅடி உபரிநீர் பாபநாசம் அணையின் உபரிநீர் வழிந்தோடி வழியாக திறக்கப்பட்டுள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன. பாபநாசம் கீழ் அணை, பாபநாசம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் தாமிரவருணி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.