பலத்த மழை காரணமாக 3வது முறையாக நிரம்பிய கடனாநதி அணை
கடனாநதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.50 அடி உயர்ந்து வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அணை நீர்மட்டம் 82.50 அடியை எட்டி 3வது முறையாக நிரம்பியது.


கடனாநதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.50 அடி உயர்ந்து வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அணை நீர்மட்டம் 82.50 அடியை எட்டி 3வது முறையாக நிரம்பியது.
அணைக்கு விநாடிக்கு 833.68 நீர்வரத்து இருந்தது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் கருணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. பருவ மழை தொடங்கிய பிறகு இந்த அணை 3 ஆவது முறையாக நிரம்பியுள்ளது.
மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1030 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 105.75 அடியாக இருந்தது. ராமநதி அணையின் நீர்மட்டம் 79.25 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 61.52 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 94 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 42.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 45 அடியாகவும் இருந்தது.
நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து கணிசமாக தொடர்ந்து இருப்பதால் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் பாணதீர்த்த அருவிகளில் தொடர்ந்து வெள்ளம் உள்ளது. அணைகளில் இருந்து உபரிநீர் கல்யாணதீர்த்த அருவி வழியாக திறப்பதால் அகஸ்தியர் அருவியில் தொடர்ந்து வெள்ளம் நீடித்தது.
வியாழக்கிழமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடித்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...