அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே விரைவு பேருந்து கவிழ்ந்து விபத்து: 4பேர் படுகாயம் 

விருதுநகர் அருகே அரசு விரைவு பேருந்து தலைக்குப்புற கவிழந்து விபத்துக்குள்ளாதில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம்

Updated On :12 டிசம்பர் 2014, 1:52 pm

விருதுநகர் அருகே அரசு விரைவு பேருந்து தலைக்குப்புற கவிழந்து விபத்துக்குள்ளாதில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மதுரையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி அரசு விரைவு பேருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்றது. அப்போது, விருதுநகர் அருகே மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரேயுள்ள 4 வழிச்சாலையை கடந்த சென்ற போது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு கம்பியை உடைத்துக் கொண்டு சர்வீஸ் சாலையில் தலைகுப்புற கவிழந்து விபத்துக்குள்ளானது.

     இந்த விபத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஓட்டுநர் கிருஷ்ணகுமார்(40), நெல்லை அருகே வள்ளியூரைச் சேர்ந்த நடத்துநர் சசிக்குமார்(38), பயணிகளான அம்பசமுத்திரத்தைச் சேர்நத முத்துராமலிங்கம்(45) மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரதீப்(30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

     உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலக்கரை போலீஸார் காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.