அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைக்கும் பணி 15ம் தேதி தொடங்குகிறது 

விருதுநகர் மாவட்டத்தி்ல உள்ள அந்தந்த பகுதி ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைக்கும் பணி வருகிற 15-ம் தேதி

Updated On :12 டிசம்பர் 2014, 3:00 pm

விருதுநகர் மாவட்டத்தி்ல உள்ள அந்தந்த பகுதி ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைக்கும் பணி வருகிற 15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

    இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு வரையில் அரிசி மற்றும் பொதுவிநியோக திட்ட பொருள்கள் பெறும் வகையில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 214 குடும்ப அட்டைகள் உள்ளன. எப்பொருள்களும் வழங்காத நிலையில் முகவரிக்கு மட்டும் பயன்படுத்தப்படும் 1368 குடும்ப அட்டைகளும் உள்ளன.

    தற்போது, நடைமுறையில் இருந்து வரும் குடும்ப அட்டைகளின் ஆயுள்காலம் இம்மாத இறுதியோடு முடிகிறது. இதைக்கருத்தில் கொண்டு மேலும் 31.12.2015 வரையில் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யும் வகையில் உள்தாள்களை இணைக்கும் பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகள் மூலம் உள்தாள் இணைக்கும் பணி மேற்குறிப்பிட்ட நாளில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

    ஏற்கனவே இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட வழங்கல் துறையின் மூலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யும் உள்தாள்களை போதுமான அளவுக்கு கூடுதலாகவே நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனால், பொருள்கள் வாங்குவதற்காக செல்லும் போது தங்களது குடும்ப அட்டைகளில்  கூடுதல் தாளை இணைத்துக் கொள்ளலாம் என பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.