கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் மீனவளத்தை பெருக்கும் வகையில் 2.15 லட்சம் மீன்குஞ்சுகளை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை ஏரி தண்ணீரில் விட்டார்.
தமிழ்நாடு அரசு உள்நாட்டு மீன்வள மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மானிய விலையில் வலைகள் வழங்குதல், மிதவை கூடுகளில் மீன் வளர்த்தல், பண்ணை குட்டையில் மீன்வளர்க்கும் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் மானியம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் லால்பேட்டை, உடையார்குடி, சித்தமல்லி, புடையூர், ஓமாம்புலியூர் மற்றும் சேத்தியாத்தோப்பு கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தினமும் மீன் பிடிப்பின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இவர்களின் மேம்பாட்டிற்காக வீராணம் ஏரியில் மீன்வளத்துறையின் மூலம் ஆண்டு தோறும் மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன.
தற்போது வீராணம் ஏரியில் நீர்மட்டம் 44.60 அடியாக உள்ளதால், மீன்குஞ்சுகள் இருப்பு செய்ய இதுவே உகந்த காலமாகும். எனவே தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதி உதவித்திட்டத்தின் மூலம் 2014-15 ஆண்டிற்கு பெருரக மீன்குஞ்சு விரலிகள் 12.15 லட்சம் இருப்பு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக சனிக்கிழமை வீராணம் ஏரியில் 2.25 லட்சம் மீன்குஞ்சுகளை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விட்டு, பணியினை தொடங்கி வைத்தார். இதில் கட்லா, ரோகு, மிஸ்கால், புல்கெண்டை, சில்வர் கெண்டை மீன் இன வகைகள் விடப்பட்டன. மேலும் தொடர்ந்து 10 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


