ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக தானியங்கி டிக்கெட் இயந்திரம்

ஸ்மார்ட் கார்டு மூலம் முன்பதிவு செய்யாத பயணிகள், பிளாட்பார்ம் டிக்கெட் ஆகியவற்றை பெறும் வகையில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் (ஏ.டி.வி.எம்) திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில்

News image
Updated On :15 டிசம்பர் 2014, 11:28 am

ஷேக் அப்துல்காதர்

ஸ்மார்ட் கார்டு மூலம் முன்பதிவு செய்யாத பயணிகள், பிளாட்பார்ம் டிக்கெட் ஆகியவற்றை பெறும் வகையில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் (ஏ.டி.வி.எம்) திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் அமைக்கப்படுகிறது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தினமும் வாராந்திர விரைவு ரயில்கள் உள்ளிட்ட 72 ரயில்கள் இயக்கப்பபடுகிறது. முன்பதிவு, முன்பதிவில்லாத பயணிகள், வழியனுப்ப வருவோர் உள்பட 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரயில் நிலையத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.

முன்பதிவு செய்யாத பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகளை வழியனுப்ப வருவோர் கூட்ட நெரிசல் காரணமாக பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க முடியாமல் திணறுகின்றனர். ஆகவே பயணிகள் வசதிக்காக சந்திப்பு ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்பட உள்ளது.

பயணிகளுக்கு ஸ்மார்ட் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டினை ரீ-சார்ஜ் செஸ்ரீய்து முறையில் முன்பதிவு இல்லாத டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் ஆகியவற்றை இந்த தானியங்கி டிக்கெட் இயந்திரத்தில் (ஏ.டி.வி.எம்) பெற்றுக் கொள்ளலாம். சந்திப்பு ரயில் நிலையத்தில் பழைய ரயில்நிலைய பகுதியில் 4 இடங்களிலும், புதிய ரயில் நிலைய பகுதியில் 2 இடங்களிலும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்படுகிறது. இந்த இயந்திரம் தமிழகத்தில் சென்னையிலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் உள்ளது. மதுரை கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலி ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் விரைவில் அமைக்கப்பட இருப்பதாக ரயில்வேதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.