ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கூடன்குளத்தில் 3,4 ஆவது அணுஉலைகள் 2015 இல் மார்ச் மாதம் பணிகள் தொடங்கும்: வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர்

கூடன்குளத்தில் 6 அணுஉலைகள் நிறுவத் தேவையான கட்டமைப்பு உள்ளது. வரும் 2015 இல் மார்ச் மாதம் ரூ. 39 ஆயிரத்து 746 கோடி மதிப்பில் 3,4 ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணி தொடங்க இருப்பதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :16 டிசம்பர் 2014, 8:16 am

ஷேக் அப்துல்காதர்

கூடன்குளத்தில் 6 அணுஉலைகள் நிறுவத் தேவையான கட்டமைப்பு உள்ளது. வரும் 2015 இல் மார்ச் மாதம் ரூ. 39 ஆயிரத்து 746 கோடி மதிப்பில் 3,4 ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணி தொடங்க இருப்பதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கூடன்குளம் அணுஉலையை சுற்றியுள்ள 13 கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும், அப்பகுதியில் வசிக்கும் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த அணுஉலை சார்பில் ரூ. 200 கோடியும், மத்திய அரசு ரூ. 300 கோடியும் வழங்குகிறது.

அணுஉலை சார்பில் ஏற்கனவே ரூ. 20 கோடி வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ரூ. 55 கோடிக்கான காசோலையை ஆட்சியர் மு. கருணாகரனை சந்தித்து அணுஉலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் வழங்கினார். அப்போது வளாக இயக்குநர் ஆர்.சுந்தர் அளித்தப் பேட்டி: கூடன்குளம், அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10 ஆயிரம் பேருக்கு வீடுக் கட்டி கொடுக்கப்பட உள்ளது. அப்பகுதியில் ரூ. 92 கோடியில் தூண்டில் வளைவு, மீனவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களும், ரூ. 10 கோடி மதிப்பில் மருத்துவமனை, ரூ. 68 கோடியில் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது.

கூடன்குளத்தில் முதல் அணுஉலை மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை 300 யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டு தென்னக பாதையில் இணைக்கப்பட்டுள்ளது. பரிசாத்த முறையில் மின் உற்பத்தி செய்வதால்  யூனிட் ரூ. 1.22 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கூடன்குளம் அணுஉலை ரூ. 366 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.

விரைவில் வணிக ரீதியான உற்பத்தி தொடங்குவது குறித்து தலைமையுடன் பேசி அறிவிக்கப்படும். கூடன்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. 2 ஆவது அணுஉலையில் அடுத்த வாரம் வெப்பநீர் சோதனை ஓட்டம் தொடங்கப்படும்.
அப்போது அதிகமான நீராவி வெளியாகும். மேலும் சப்தமும் எழும் இதனால் எந்த பாதிப்பு இருக்காது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

கூடன்குளத்தில் 3, 4 ஆவது அணுஉலை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதற்கான பணிகள் தொடங்கும். ரூ. 39 ஆயிரத்து 746 கோடி மதிப்பில் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் நிறுவப்பட உள்ளது.

கூடன்குளத்தில் 6 அணுஉலைகள் நிறுவத் தேவையான கட்டமைப்பு உள்ளது. இதுவரை 2 லட்சம் பேருக்கு கூடன்குளம் குறித்த பேரிடர் மேலாண் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கூடன்குளம் அணுஉலை குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.