ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மணிமுத்தாறு அணை நிரம்பியது: 1,400 கனஅடி உபரிநீர் திறப்பு

வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்தததை அடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மணிமுத்தாறு அணை சனிக்கிழமை இரவு நிரம்பியது. பாபநாசம், சேர்வலாறு அணைகளை தொடர்ந்து மணிமுத்தாறு அணையும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News image
Updated On :20 டிசம்பர் 2014, 9:54 pm

ஷேக் அப்துல்காதர்

வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்தததை அடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மணிமுத்தாறு அணை சனிக்கிழமை இரவு நிரம்பியது. பாபநாசம், சேர்வலாறு அணைகளை தொடர்ந்து மணிமுத்தாறு அணையும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்குப் பருவ மழை நிகழ் பருவத்தில் வழக்கத்தை விட 161.54 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.


143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை, 156 அடி கொள்ளளவை கொண்ட சேர்வலாறு அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்ட நிலையில் சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு 118 அடி கொள்ளளவு உள்ள மணிமுத்தாறு அணை நிரம்பியது. இதனை தொடர்ந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.


இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த உபரிநீர் 1,400 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் உதவி செயற்பொறியாளர் குமாரசாமி, உதவி பொறியாளர் மாயமுருகன் உள்ளிட்டோர் அணையில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.