ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைய வற்புறுத்திய இளைஞர்

திருச்சி பேட்டைவாய்த்தலை அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரயில் கேட் கீப்பரை ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் இணைய வற்புறுத்தியவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Updated on
1 min read

திருச்சி பேட்டைவாய்த்தலை அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரயில் கேட் கீப்பரை ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் இணைய வற்புறுத்தியவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகள் போதுமணி. இவர் பேட்டைவாய்த்தலை அருகேயுள்ள காமநாயக்கன் பாளையத்தில் ரயில் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இளைஞர் ஒருவர் இவரிடம் நான் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் இருக்கிறேன். இந்த அமைப்பில் நீங்களும் சேரவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கேட் கீப்பர் போதுமணி இது குறித்து பேட்டவாய்த்தலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் ஊட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பதும், எம்.ஏ. பட்டத்தாரியான இவர், ஐ.ஏ.எஸ் முதன் நிலைத்தேர்வு எழுதியுள்ளார் என்பதும், வேலைக் கிடைக்காத விரக்தியில் மன நலம் பாதிக்கப்பட்டு செல்லும் இடமெல்லாம் இது போன்ற செயலில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் ஊட்டியிலுள்ள சுரேஷின் அண்ணன் ரமேஷிக்கு தகவல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com