சாத்தூர் அருகே நகை பாலீஷ் போட்டு தருவதாக கூறி நகையை திருட முயற்சி செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகே கோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பாலதங்கம்மாள்(32) வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் பணமில்லாமல் நகை பாலீஷ் செய்து தருவதாக கூறியுள்ளனர். அதை உண்மையென நம்பிய பாலதங்கம்மாள் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை எடுத்துக் கொடுத்தாராம்.
அப்போது, மர்ம நபர்கள் நகையை கையில் வாங்கியவுடன் தப்பியோட தொடங்கினார்களாம். இதைத் தொடர்நது அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதன் பின்னர் தப்பியோடிய இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை செய்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமர்குமார்(21), சுராஸ்குமார்(20) என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

