நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தொழிலாளர்கள் 60 பேரை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பொறையாறு கிளையில் பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பொறையாறு குமரன் கோயில் பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு போக்குவரத்து கழக பணிமனையை நோக்கி முற்றுகையிட சென்றனர்.பழைய பேருந்து நிலையம் அருகே ஊர்வலம் வந்தபோது நாகை நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி துரைராஜ்,பொறையாறு காவல் ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்ட காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி அதில் கலந்து கொண்ட 60 பேரை கைது செய்தனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை செம்பனார்கோயில் தெற்கு ஒன்றிய திமுக செயலர் நிவேதா முருகன்,பேரூர் அவைத்தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின் காரணமாக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் காலை முதலே ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதனிடையே பொறையாறு கிளையிலிருந்து 30 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டன.இதனால பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

காங்கிரஸ் வேட்பாளா் ஆத்தூா் தொகுதி

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

